பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியானார் கீர்த்தி சுரேஷ்..!

269

 

மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் கூட அறிமுகமான வேகத்திலேயே அதிரடியாக படங்களை கைப்பற்றி நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். இன்னும் இவர் நடித்த படம் எதுவும் தமிழில் ரிலீசாகாத நிலையில் நான்கு படங்களில் நடித்துவரும் கீர்த்திக்கு, இப்போது தனுஷுடன் ஜோடிசேரும் ஜாக்பாட் அடித்திருக்கிறது.

பிரபுசாலமன் இயக்கும் இந்தப்படத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் துரந்தோ ரயிலில் கேண்டீனில் வேலை செய்பவராக நடிக்கிறார் தனுஷ். முதலில் இந்தப்படத்துக்கு ஒரு புதுமுகத்தை தான் கதாநாயகியாக்கலாம் என முடிவுசெய்திருந்தாராம் பிரபுசாலமன். ஒருவகையில் கீர்த்தியும் தமிழுக்கு புதுமுகம் தான் என்பதால் அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டாராம். படப்பிடிப்பு வரும் ஜூலையில் துவங்க இருக்கிறது.

Comments are closed.