இரண்டாம் பாகங்களால் இசையமைப்பாளராக மாறிய லியோன் ஜேம்ஸ்..!

221

காஞ்சனா-2வில் இசையமைப்பாளர்களாக பணியாற்றிய சி.சத்யா மற்றும் தமன் ஆகியோருடன் இன்னும் ஒரு நபரும் இணைந்து பணியாற்றி இருந்தார். அவர்தான் ‘வாயா என் வீரா’ என்ற ஒற்றை பாடல் மூலம் யூடியூப்பில் சக்கை போடு போட்ட லியோன் ஜேம்ஸ். லாரன்ஸ் மூலமாகத்தான் காஞ்சனா-2 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டீமில் கீபோர்டு வாசித்து வந்த லியோன் ஜேம்ஸ், சின்ன வயதிலே ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியும் உள்ளார். தற்போது ஆர்.எஸ்.இன்போடைன்மென் தயாரிப்பில் பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்கும் ‘கோ-2’ படத்திற்கு இசையமைப்பாளராக புரமோஷன் பெற்று சோலோ மியூசிக் டைரக்டராக அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்..

Comments are closed.