லட்சுமியின் அடுத்த புராஜெக்ட் ‘அம்மிணி’..!

240

 

தான் இயக்கிய ‘ஆரோகணம்’ படத்தில் நல்ல விமர்சனங்களையும் ‘நெருங்கி வா முத்தமிடாதே’ மூலம் அட, இயக்குனர் வரிசையில் இடம்பிடித்துவிட்டாரே என்கிற ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இப்போது தான் இயக்கும் மூன்றாவது படத்திற்கு ‘அம்மிணி’ என பெயர் வைத்து, பட வேலைகளை தொடங்கிவிட்டார். இந்தப்படம் சமூகத்தில் வாழ்கின்ற ஒரு நிஜத்தின் பிரதிபலிப்பு தானாம்.

“இரண்டு மாதங்களுக்கு முன் நான் எதிர்பாராமல் சந்தித்த சுவராஸ்யமான ஒரு கதாபாத்திரம் தான் அம்மிணியாக மாறியிருக்கிறது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என உதாரணமாக வாழும் அவர் மூலமாக, நாம் இதுவரை புரிந்துகொள்ளாத, அல்லது புரிந்துகொள்ள தவறிய சில விஷயங்களை அறிந்துகொண்டேன்.. பணத்தையும் தாண்டி ஒரு வாழ்க்கை  உண்டு என்பதை அந்த ’அம்மிணி’ எனக்கு கற்றுத்தந்தார். அதுதான் இந்தப்படம்” என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Comments are closed.