எவ்வளவுக்கு எவ்வளவு ‘கொலவெறி’ பாடல் தனுஷுக்கு சந்தோஷத்தை கொடுத்ததோ, அந்த நிலை மாறி சமீபகாலமாக அந்தப்பாடலை ஏன் பாடினோம் என்ற வருத்தப்படும் அளவுக்கும் தனுஷை கொண்டுவந்து விட்டிருகிறது அந்தப்பாடல். காரணம் போகும் இடங்களில் எல்லாம் தனுஷ் ரசிகர்கள் அவரைச் சுற்றிக்கொண்டால் தவறாமல் கேட்பது ‘கொலவெறி’ பாடலை ரெண்டுவரியாவது பாடுங்களேன் என்றுதான்.
சமீபத்தில் கூட திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷை அங்கிருந்த மலையாள ரசிகர்கள் ‘கொலவெறி’ பாடலின் சில வரிகளையாவது பாடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் தனுஷும் பாடியிருக்கிறார்.
ஆரம்பத்தில் சந்தோஷமாக இதை அனுபவித்த தனுஷுக்கு இப்போது எந்த பொது நிகழ்ச்சியிலோ மேடைகளிலோ கலந்துகொள்ளவே தயக்கமாக இருக்கிறதாம். “நான் ஒரு நடிகன் என்பதையே மக்கள் மறந்துவிட்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. இன்னும்கூட கொலவெறி பாடலின் இரண்டு வரியாவது பாடுங்கள் என அவர்கள் ஞாபகம் வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்தப்பாடலை பாட எனக்கே போர் அடிக்கிறது” என்று தன் சங்கடத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.