‘கொடி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!

212

kodi-for-diwali

வரும் தீபாவளி படங்களில் காஷ்மொராவுக்கு அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படம் தனுஷ் நடித்துள்ள கொடி’ தான்.. தனுஷ் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளது, அரசியல்வாதியாக நடித்துள்ளது என நிறைய விஷயங்கள் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என்பது படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே கணிக்கமுடிகிறது.

தனுஷின் கதாநாயகிகளாக த்ரிஷா, ‘பிரேமம்’ அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். முதன்முறையாக தனுஷின் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளனர். தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஜனரஞ்சகமான ரசிகர்களுக்கும் இந்தப்படம் வித்தியாச அனுபவத்தை கொடுக்கும் என நம்பலாம்.

Comments are closed.