
காமெடி படமா..? ஆமாம் ஹாரர் படமா..? ஆமாம்.. சரித்திர படமா..? அதுவும் கூடத்தான்.. கார்த்தியின் நடிப்பில் உருவாக்கி இருக்கும் ‘காஷ்மோரா’ படத்தை நீங்கள் எந்த வகைக்குள்ளும் வேண்டுமானாலும் பொருத்தலாம்.. ஆனால் பியூட்டி என்னவென்றால் இது மூன்றுமே கலந்த ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் தர காத்திருக்கிறது இந்த ‘காஷ்மோரா’.
கார்த்தி ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்தப்படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
Comments are closed.