‘கோச்சடையான்’ ஏப்ரலில் ரிலீஸ் – நம்பிக்கை தரும் சென்டிமெண்ட்

142

சூப்பர் ஸ்டார் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் ஏப்ரல்-11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்புத்தாண்டு ரிலீஸாக மூன்று தினங்களுக்கு முன் வெளியிட முடிவு செய்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு புறம் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பிப்பதும் அப்போதுதான்.

அதனால் ‘கோச்சடையான்’ நின்று நிதானமாக விளையாட தாராளமாக நேரம் எடுத்துக்கொள்ளலாம். மேலும் ரஜினிக்கும் ஏப்ரல் மாததிற்கும் சென்டிமெண்டான கூட்டணியே உண்டு. இதற்குமுன் ‘படையப்பா’ ஏப்ரல்-9லும், ‘அருணாச்சலம்’ ஏப்ரல்-11லும், பிளாக்பஸ்டர் ‘சந்திரமுகி’ ஏப்ரல்-15லும் வெளியாகி மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கின்றன. அதனால் கோச்சடையானிலும் அந்த சாதனை வரலாறு தொடரும் என்பது உறுதி.

Leave A Reply

Your email address will not be published.