“பயம் பேய்களிடம் இல்லை” – ‘ஷிவானி’ காவ்யா ஷெட்டி

86

கே.வி.ஆனந்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த சாய் கோகுல் ராம்நாத் இயக்கியுள்ள படம் தான் ஷிவானி. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் நிதின் சத்யா, சந்துரு கதாநாயகர்களாக நடிக்க, ஹீரோயினாக நடிக்கிறார் காவ்யா ஷெட்டி. தொலைக்காட்சியில் விளம்பரப் படங்களில் மாடலாக நடித்துக்கொண்டிருந்த காவ்யா ஷெட்டி, இந்தப்படத்தின் மூலம் ஹீரோயினாக புரமோஷன் ஆகியிருக்கிறார்.

தரில்லர் படத்தில் நடித்திருக்கிறீர்களே, உங்களுக்கு பேய், பிசாசு என்றால் பயமாக இல்லையா என்று கேட்டால் அவரது பதில் வேறுமாதிரிஇருக்கிறது. “எனக்கு இரவில் நடமாடுவது என்றால் பயம்தான்,. ஆனால் அது பேய், பிசாசு இவற்றால் அல்ல. மனித உருவில் நடமாடும் மிருகங்களைக கண்டுதான்” என்கிறார் காவ்யா ஷெட்டி. இவரை இந்த அளவுக்கு மனதை பாதிக்கச் செய்தது, சமீபத்தில் மும்பை பெண் பத்திரிக்கை நிருபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தானாம்.

Leave A Reply

Your email address will not be published.