தலைப்பை படித்ததுமே ஓஹோ, கமல் தான் நடித்திவரும் ‘பாபநாசம்’ படத்திற்காக பாடியிருப்பாராக்கும் என நினைத்து விடவேண்டாம். இது புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் ‘அவம்’ படத்திற்காக நட்புடன் பாடிக்கொடுத்தது.
இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் பாடல் என்பதால் இதை பாடுபவர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிப்படுத்தும் வகையில் பாடவேண்டியதிருந்தது. அதுமாதிரியே மதன் கார்க்கியின் கருத்துமிக்க வரிகளின் தன்மையை உணர்ந்து கமலும் தன் குரலால் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார்..
இந்தப்படத்தில், கௌரவ் நாயகனாக நடிக்க, கன்னடநாட்டை சேர்ந்த காவ்யா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். விவேக் லெஸ்தர் உதூப் வில்லனாக நடிக்க, கார்த்திக் வில்வாகிரிஷ், காஜல் வசிஷ்ட், எம்.எஸ்.பாஸ்கர்,அனுபமா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Comments are closed.