கதம் கதம் – விமர்சனம்

209

 

ஒரே போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் இருவரில் நட்டி(நட்ராஜ்) லஞ்சம் வாங்குவதையே தொழிலாக கொண்ட இன்ஸ்பெக்டர்.. நந்தாவோ நேர்மையுடன் கடமையாற்ற விரும் சப் இன்ஸ்பெக்டர். இவர்களுக்குள் ஏற்பட்டு முட்டல், மோதல் தான் கதை பயணிக்கும் தளம்.

நட்டி வரும் காட்சிகளில் எல்லாமே சுறுசுறுப்பாக இருக்கின்றன. அவர் லஞ்சம் வாங்கிக்கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுவது இன்றைய பல காவல்துறை அதிகாரிகளின் கருப்பு பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இடைவேளைக்கு பின்னான அவரது குண மாற்றமும் இயல்பாக அமைந்திருக்கிறது. டயலாக் டெலிவரியில் பின்னுகிறார் நட்டி.

கோபமும் விறைப்புமாக போலீஸ் வேடத்தில் வரும் நந்தா தேறுகிறார் என்றாலும், காதல்காட்சிகளில் பின் தங்குகிறார். அதற்கு சுமாரான சனம் ஷெட்டியின் பெர்பார்மன்ஷும் ஒரு காரணம். எம்.பி.யாக வந்து வசனத்திலேயே வில்லத்தனம் காட்டும் பெரியவர் நம்மை கவர்கிறார்..

விறுவிறுப்பாக செல்லும் கதைக்கு தாஜ்நூரின் இசையில் இரண்டு டூயட் பாடல்கள் தடை போடுகின்றன. இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கான சீனியர்-ஜூனியர் யுத்தத்தை காமெடி கலந்த சதுரங்க ஆட்டமாக காட்சிப்படுத்த முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் பாபு தூயவன்.

Comments are closed.