வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘பிரியாணி’ படத்தை வரும் ஜனவரியில் ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் தற்போது கொஞ்சம் முன்னதாகவே, அதாவது டிசம்பரிலேயே வெளியிட தீர்மானித்து வேலைகளை துரிதப்படுத்தியுள்ளார்கள். இத்தனைக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்துக்கு முன்பே ‘பிரியாணி’யை ரிலீஸ் செய்யத்தான் முதலில் திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால் படத்தில் கிராபிக்ஸ் பணிகள் நிறைய இருந்ததால் பிரியாணி ரிலீஸை ஜனவரிக்கு மாற்றினார்கள். ஆனால் இப்போது கிட்டத்தட்ட படத்தின்வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் டிசம்பரிலேயே படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தினர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.