ஒன்மேன் ஆர்மியாக கேரளாவில் கலக்கிய ‘கார்த்தி..!

204

karthi-in-kochi-for-kaashmora-promotion

கார்த்தி நடித்த காஷ்மோரா படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்-28 அன்று வெளியாக இருக்கிறது.. கோகுல் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தபடத்திற்கு இசையமைத்துள்ளார்.. தற்போது இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பம்பரமாக சுற்றிவருகிறார் கார்த்தி.

கேரளாவிலும் இந்தப்படம் பெரிய அளவில் வெளியாவதை முன்னிட்டு நேற்று கொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு காஷ்மோரா படம் குறித்த விரிவான தகவல்களை பகிர்ந்துகொண்டார் கார்த்தி.. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் யாருமே இல்லாமல் தன்னந்தனி ஆளாக கார்த்தி ஒருவர் மட்டுமே, கேரளா மீடியாக்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களையும் செய்திகளையும் அளித்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.

Comments are closed.