“‘பாகுபலி’யை நினைத்துக்கொண்டு காஷ்மோராவை பார்க்கவேண்டாம்” ; கார்த்தி..!

200

kashmora-karthi-explain

வரும் வெள்ளியன்று கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ படம் தீபாவளி ரிலீஸாக வெளியாக இருக்கிறது.. இதனையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். சரித்திர கால பின்னணியுடன் கார்த்தியின் கெட்டப்பும், படத்தின் ட்ரெய்லரும் இருப்பதால் ஒருவேளை பாகுபலி போல இந்தப்படமும் இருக்குமோ என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு வரவே செய்யும்.

இந்த சந்தேகம் படம் பார்க்க வரும் ரசிகர்களை தாக்காதபடி, கார்த்தி அதற்கு விளக்கம் கொடுத்தார்.. “இந்த ராஜ்நாயக் கேரக்டரும் ரத்னமகாதேவி கேரக்டரும் படத்தில் அரைமணி நேரம் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதனால் தயவு செய்து இதை பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு படத்தை பார்க்காதீர்கள்.. இது முழுக்க முழுக்க காமெடி கலந்த ஹாரர் படம்” என விளக்கம் அளித்தார்

Comments are closed.