பிரபலங்களின் பெயரை பயன்படுத்தி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சிலர் போலியான தகவல்களை பரப்புவது தொடந்துகொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் நடிகைகளின் பெயரை பயன்படுத்தி தவறான தகவல்களை வெளியிட்டு சங்கடத்தில் ஆழ்த்துவதுதான் வழக்கமாக இருந்தது.
தற்போது சமூக வலத்தளங்களில் நடிகர் கார்த்தியின் பெயரை பயன்படுத்தி யாரோ ஒருசிலர் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும்படி செய்திகளை பரப்பிவருகின்றனர். இதனை அறிந்த கார்த்தி அதற்கு பலமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக்கிலோ அல்லது ட்விட்டரிலோ தான் இல்லை என்றும் வெளிநாடுகளில் இருந்து அகரம் பவுண்டேஷனுக்காக தான் பணம் வாங்குவதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்த கார்த்தியின் பேட்டியைக்காண இங்கே க்ளிக் செய்யவும்.