பாலாஜி சக்திவேல் டைரக்ட் பண்ணிய ‘கல்லூரி’ படத்துல அறிமுகமானவர் தான் நடிகர் பரணி. ஆனாலும் ‘நாடோடிகள்’ படத்துல சசிகுமாரோட டீம்ல மூணுபேர்ல ஒருத்தரா நடிச்சப்பத்தான் ரசிகர்கள்கிட்ட ஈஸியா ரீச் ஆனாரு.. அதுக்கப்புறமா ‘தூங்கா நகரம்’, ‘விலை’ன்னு ரெண்டு மூணு படங்கள்ல நாலு ஃப்ரண்ட்ஸ்ல ஒருத்தரா நடிச்ச பரணி இப்போது கன்னக்கோல் என்கிற படத்தில் ஹீரோவாக புரமோஷன் ஆகியிருக்கார். இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வி.எ.குமரேசன்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக காருண்யா நடிக்க, முக்கியமான வேடத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார்.. நாடோடிகள் படத்தில் கஞ்சா கருப்புவிடம், “நாங்களா சொல்லமாட்டோம்.. நீயா சிக்குவ’ என பரணி சொல்லும் டயலாக் இன்றும் இளைஞர்கள் மத்தியில் ஃபேமஸ்.. சரி இதில் யார் யாரை மாட்டிவிட போகிறார்கள் என இயக்குனரிடம் படம் பற்றி கேட்டோம்…
“பரணி, கஞ்சாகருப்பு, தீப்பெட்டிகணேசன், பூவைசுரேஷ் ஆகிய நால்வரும் திருடர்கள். திருடுவது மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள்.. ஆனால் அந்த ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரும் திருடர்களாக வாழ்ந்து திருந்தியவர்கள். இந்த நால்வர் மட்டுமே திருந்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் திருந்தினார்களா இல்லையா என்பது தான் கதை! ஆனால் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட கதை இது” என்கிறார் இயக்குனர் குமரேசன்.