இந்த வருட ஆரம்பத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல். இந்தப்படத்திற்கு முதல் பாகத்தைவிட எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.
இரு தினங்களுக்கு முன் ஃபேஸ்புக் நண்பர்களுக்காக தான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் கமல். அதில் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதுடன் “விஸ்வரூபம் இரண்டாம் பாகம் முதல் பாகத்தைவிட மிக அற்புதமாக வந்திருக்கிறது. Yes..I did it” என்றும் உறுதியாக கூறியிருக்கிறார். மேலும் தேதி இன்னதென்று குறிப்பிட முடியவில்லையே தவிர விரைவில் ‘விஸ்வரூபம்-2’ வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார் கமல்.
இந்த ஒன்றரை நிமிட வீடியோவில் கமல் பேச்சுடன் விஸ்வரூபம் படத்தின் மேக்கிங் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கமல் பேச ஆரம்பிக்கும்போதே ஃபேஸ்புக் நண்பர்களே என்று தான் பேசவே ஆரம்பிக்கிறார். கமல் இப்படி அழைத்து தன் நன்றியை வெளிப்படுத்த காரணம் ‘விஸ்வரூபம்’ படத்திற்கு பிரச்சனை எழுந்தபோது ரசிகர்கள் ஃபேஸ்புக் மூலமாக கமலுக்கு ஆதரவு தெரிவித்ததோடு இந்தப் பிரச்சனையை இந்திய அளவில் எடுத்துச்சென்று கமலின் பக்கம் உள்ள நியாயத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததுதான்.
கமலின் இந்த வீடியோ கீழே