அந்நியன் படத்தில் இடம்பெற்ற ‘அண்டங்காக்கா கொண்டைக்காரி’ பாடல் மூலமாக ரசிகர்களின் நெஞ்சில் ரண்டக்க ரண்டக்க என தனது குரளால் தாளம் போட்டவர் பின்னணி பாடகி சைந்தவி. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு தமிழ்சினிமாவில் அறிமுகமானவர்.
தொடர்ந்து ‘இன்னிசை அளபெடையே’, ‘அடடா மழைடா’, ‘பிறைதேடும், ‘யாரோ இவன்’, ‘யார் இந்த சாலையோரம்’ என பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடிய சைந்தவி கடந்த வருடம் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை காதல் மணம் புரிந்தார். இன்று பிறந்தநாள் காணும் சைந்தவிக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.