மொரிஷியசில் முகாமிட்டுள்ள கமல்..!

209

 

கடந்த இருபத்தைந்து வருட வரலாற்றை புரட்டி பார்த்தால் கமலுக்கு இப்படி ஒரு ஆச்சர்யமான சூழ்நிலை உருவான சுவடே இல்லை. பின்னே வருடத்திற்கு ஒரு படம் கொடுக்க மாட்டாரா என ரசிகர்களை ஏங்கவைத்த கமல், இப்போது கைவசம் மூன்று படங்களை ரிலீஸுக்காக வைத்துக்கொண்டிருந்தாலும், கடந்த 25 மாதங்களாக முன்போலவே ஏங்க வைக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, தனது அடுத்த படத்திற்காக லொக்கேசன் வேட்டையாடுவதற்காக மொரீசியஸில் முகாம் இட்டிருக்கிறார் கமல்.. லிங்குசாமி தயாரித்து, ஈராஸ் நிறுவனம் வெளியிடவுள்ள ‘உத்தம வில்லன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச்-1ஆம் தேதி நடைபெற உள்ளதும் படம் ஏப்ரல்-2ஆம் தேதி வெளியாக உள்ளதும் தான் கமல் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

Comments are closed.