சீனியர் ஹீரோயின்கள் மூவரை ஒன்று சேர்த்த இயக்குனர்..!

205

 

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய 15 படங்களுக்கு ஆஸ்தான எடிட்டராக பணியாற்றியவர் அருண்குமார் அரவிந்த். பிரியதர்ஷன் படங்களாக பார்த்து பார்த்து இவருக்குள் இருந்த டைரக்டர் என்னும் கலைஞன் விழித்துக்கொண்டான். இயக்குனராக மாறி நான்கு படங்களையும் இயக்கிவிட்டார்.

தமிழில் கடந்த வருடம் வெளியான ‘அதிதி’ படம் மலையாளத்தில் இவர் இயக்கிய ‘காக்டெய்ல்’ படத்தின் ரீமேக் தான். இப்போது பெண்களை மையப்படுத்தி தனது புதிய படத்தை தொடங்கியுள்ள அருண்குமார் இதில் முதலில் ஒப்பந்தம் செய்தது மஞ்சு வாரியரைத்தான்.

அடுத்தடுத்து ஊர்வசி, ரேவதி என இன்னும் இரண்டு சீனியர்களையும் படத்திற்குள் இழுத்து கொண்டுவந்துள்ளார் அருண்குமார். இவர்கள் மூவரும் தொண்ணூறுளில் மலையாளத்தில் ஒரே நேரத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தாலும், இதுவரை சேர்ந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.