நான்காவது முறையாக கமல்-ஜெயராம் கூட்டணி..!

95


கமலும் ஜெயராமும் நல்ல நண்பர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கே.எஸ்.ரவிக்குமார் டைரக்‌ஷனில் 2000த்தில் வெளியான ‘தெனாலி’, அதன்பின் ‘பஞ்சதந்திரம்’ என இரண்டு படங்களில் கமலுடன் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் ஜெயராம். ஆனால் இவர்களின் நட்பு இப்போது ஆரம்பித்ததல்ல..

1989 ஆம் வருடம் கமல் மலையாளத்தில் ‘சாணக்யன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இதில் கமலுக்கு உதவி செய்யும் நண்பனாக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இந்தப்படத்தில் தன் குடும்பத்தினரின் மரணத்துக்கு காரணமான முதலமைச்சர் திலகனை மிமிக்ரி ஆர்ட்டிஸ்டான ஜெயராமின் உதவியோடு வித்தியாசமான முறையில் பழிவாங்குவார் கமல்.

நிற்க. லேட்டஸ்ட் விஷயத்திற்கு வருவோம்.. இப்போது ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திற்காக நான்காவது முறையாக கமலுடன் கூட்டணி சேருகிறார் ஜெயராம். ‘பஞ்சதந்திரம்’ படத்தில் நடித்தபோது ஜெயராமும் ரமேஷ் அரவிந்தும் திக் பிரண்ட்ஸ் ஆனது உங்களுக்கு தெரிந்திருக்கும் தானே.. தற்போது ‘உத்தம வில்லன்’ படத்தில் ஜெயராமுக்கு முக்கிய கேரக்டரை கொடுத்திருக்கிறாராம் ரமேஷ் அரவிந்த். இந்த தகவலையும் அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.