கபாலி ரிலீஸ் தேதியில் மாற்றம் ; குழப்பத்தில் மற்ற படங்கள்..!

218

kabali-poster-2

பா.ரஞ்சத் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தை முதலில் ஜுலை 1ம் தேதி வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் கொஞ்ச நாட்கள் இழுக்கும் என தெரிவதால், படத்தின் ரிலீஸ் தேதி மாறலாம் என்றே தெரிகிறது.

குறிப்பாக படத்தின் வெளியீடு இரு வாரங்களுக்குத் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இதனால் ‘கபாலி’ ரிலீஸ் தேதியை கணக்கில் வைத்து அதற்கு முன்னும் பின்னுமாக தங்களது படங்களை வெளியிடலாம் என நினைத்த சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் ‘கபாலி’ எப்போது வரும்.. தங்களது படத்தை எப்போது வெளியிடுவது என்று குழம்பிப் போயிருக்கிறார்களாம்..

Comments are closed.