விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணைந்த மடோனா செபாஸ்டின்..!

240

vijay sethupathi and madona
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றதுமே அட இது என்ன புது காம்பினேஷன் என்கிற எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுந்தது.. படத்தில் முக்கியமான வேடத்தில் டி.ராஜேந்தர் நடிக்கிறார் என்றதுமே அந்த எதிர்பார்ர்ப்பு இரட்டிப்பானது.. இப்போதோ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மீண்டும் மடோனா செபாஸ்டின் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்கிற தகவலை கேட்கும்போது ‘மகிழ்ச்சி’ என குதிக்கத்தான் தோன்ற்கிறது.

இதுநாள் வரைக்கும் இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக, சிம்புவின் நாயகி மஞ்சிமா மோகன் தான் நடிப்பார் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், ‘காதலும் கடந்துபோகும்’ படத்தின் ஹிட் ஜோடியான மடோனா செபாஸ்டினே மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்திருப்பது ஆச்சர்யம் தான். படத்திற்கு பிளஸ்சும் கூட. அனேகன், தனி ஒருவன் உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது.

Comments are closed.