இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து இயக்குனர் கோகுல் மீண்டும் விஜய்சேதுபதியுடன் கைகோர்த்துள்ள படம் தான் ஜூங்கா’.. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி அண்டர்வேர்ல்டு டான் ஆக நடிக்கிறார். அதுவும் இங்கே இந்தியாவில் இல்லை.. பாரிஸில்.. தமிழ்நாட்டில் இருக்கும் அவர் சூழல் காரணமாக பாரிஸுக்கு செல்கிறார் என்பதாக கதை போகிறதாம்.
அதனால் இந்தப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை பாரிஸில் படமாக்க இருக்கிறார்களாம்.. இதற்கு முன் விஜய்சேதுபதி நடித்த படங்களின் பாடல் காட்சிகள் மட்டுமே வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. இப்போது படத்தின் வசனக்காட்சிகள் உள்ளடங்கிய மொத்தப்படமும் வெளிநாட்டில் படமாக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும்.

Comments are closed.