கடந்த வருடம் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தர்மதுரை படம் சகல தரப்பினரையும் உருக வைத்தது.. மிக நேர்த்தியான நடிப்பில் தர்மதுரை கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் விஜய்சேதுபதி.. இந்தப்படத்தின் கதைக்கருவிற்காகவே ராமதாஸ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இந்தப்படத்தை சிலாகித்து பாராட்டினார்கள்.
சமீபத்தில் தான் இந்தப்படத்தை பார்த்து ரசித்த வைகோவும், இந்தப்படம் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் இந்தப்படம் குறித்தும் அங்குலம் அங்குலமாக ரசித்து பாராட்டியுள்ளார். இதோ முத்தாய்ப்பாக அவர் படத்தையும் விஜய்சேதுபதியையும் சீனுரமசாமியையும் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என பாருங்களேன்..
“இந்தப்படத்தை இயக்கிய சீனு ராமசாமிக்கு எவ்வளவு உயர்ந்த விருது கொடுத்தாலும் தகும். இதோ, தெற்குச் சீமையில் இருந்து, ஆம், இராஜபாளையத்தில் இருந்து ஒரு உன்னதமான நடிகன் வெள்ளித்திரையில் ஆளுமை செய்கிறான். அவர்தான் சகோதரன் விஜய்சேதுபதி ஆவார். இவரது, பன்முகத்திறமை, பல வெற்றிகளை குவிக்கும். சீனு ராமசாமிக்கு உலக அளவில் எந்த உயரிய விருது கிடைத்தாலும், அந்த விருதுக்குத்தான் பெருமை”.
இவ்வாறு மனம் திறந்து பாராட்டியுள்ளார் வைகோ.

Comments are closed.