ஜில்லா’வுக்காக ஸ்ரேயா கோஷலுடன் பாடிய விஜய்

80

‘துப்பாக்கி’ படத்தில் விஜய் பாடிய ‘கூகுள் கூகுள்’ பாட்டும் ஹிட்.. ‘தலைவா’ படத்தில் பாடிய “வாங்கண்ணே. வணக்கங்கண்ணே..” பாடலும் ஹிட். அப்புறம் விஜய்யை விட்டுவிடுவார்களா என்ன?. பாடுவது ஒன்றும் விஜய்க்கு புதிது இல்லை.. இதுவரை கிட்டத்தட்ட 25 பாடல்களுக்கு குறையாமல் பாடிவிட்டார். என்ன, அவ்வப்போது இரண்டு மூன்று படங்களுக்கு இடையில் ஒரு பாடல் என்ற அளவில்தான் ஜாலியாக பாடிவந்தார் விஜய்.

ஆனால் வரிசையாக பாடல்கள் ஹிட்டாவதால் தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலாவது பாடும்படி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் எல்லோரும் அன்புக்கட்டளை போட ஆரம்பித்துள்ளார்கள். அப்படியென்றால்? எஸ்.. நீங்கள் நினைப்பது சரிதான். ‘ஜில்லா’ படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் விஜய். தலைவா படத்தில் தனி ஆவர்த்தனம் செய்தவர், ‘ஜில்லா’ படத்தில் இந்தப்பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

மெலடியாக உருவாகியுள்ள இந்தப்பாடலில் தனது கைவண்ணம் முழுவதையும் காட்டியிருக்கிறாராம் இசையமைப்பாளர் டி.இமான். விஜய், ஆண்ட்ரியா இணைந்து பாடிய ‘கூகுள் கூகுள்’ பாடல் போல ஸ்ரேயாகோசலுடன் இணைந்து பாடியுள்ள இந்தப்பாடலும் ஹிட்டாகும் என்று அடிக்காமல் சொல்கிறார்கள் ஜில்லா யூனிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.