தேசியவிருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். ஆர்யா, விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் ‘புறம்போக்கு’ படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் இந்தப்படத்தை முதலில் ஜீவா, ‘ஜெயம்’ ரவியை வைத்து எடுப்பதாகத்தான் இருந்தது. ஆனால் அது ஏன் நடக்கவில்லை, என ஜனநாதனிடம் கேட்டால் அவர் சொல்லும் பதில் நியாயமானதாகவே இருக்கிறது.
“என்னைவிட இதில் ஜீவாவும், ‘ஜெயம்’ ரவியும் இணைந்து நடிக்க ஆர்வமா இருந்தாங்க. ஆனால் இரண்டு பேரின் தேதிகளும் ஒன்றாக கிடைக்கவில்லை. அதுபோல இரண்டு நடிகர்களுக்குமான சம்பளத்தால் பட்ஜெட் உயரும்போது அதற்கான மார்க்கெட் வேல்யூ உயரலேன்னு தயாரிப்பு தரப்புல சொல்றாங்க. இப்போ யுடிவி உள்ளே வந்த பின்னாடித்தான் ஆர்யா, விஜய்சேதுபதி இருவரையும் சேர்த்து படம் பண்ண முடியுது. ஏன்னா ஒரு தயாரிப்பாளர் அணுகுவதற்கும், கார்ப்பரேட் கம்பெனி அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு” என்கிறார் இந்தப்படத்தில் புது இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த இருக்கிறார் ஜனநாதன். படத்திற்கு ஹீரோயின் இன்னும் முடிவாகலை. ஆக்ஷன் பண்ணுகிற பெண்ணாக வேண்டும் என்கிறார் ஜனநாதன். காரணம் ஹீரோயின் இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோ மாதிரியாம். அதோடு ரெண்டு ஹீரோவுக்கும் ஒரு ஹீரோயின் தானாம்.