
தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும் இந்தியாவில் இலக்கியத்துக்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்றவருமான ஜெயகாந்தன் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 81. அவர் ஏராளமான சிறுகதைகளும் நாற்பது நாவல்களையும் எழுதியுள்ளார். அவரது பல படைப்புகள் திரைப்படங்களாகவும் வெளியாகியுள்ளன.
சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப் போல் ஒருவன், ஊருக்கு நூறு பேர், அக்ரஹாரத்தில் கழுதை, புத்துச்செருப்பு போன்ற அவரது படைப்புகள் மிகவும் பிரபலமானவை. இதில் சிலவற்றை அவரே இயக்கியும் உள்ளார். இந்தியாவில் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதான ஞானபீட விருது 2002 ஆம் ஆண்டுக்காக அவருக்கு வழங்கப்பட்டது. இதுதவிர சாகித்ய அகாடமி விருது மற்றும் பத்ம பூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Comments are closed.