ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவான ‘வீரத்திருவிழா’…!

223

veeera thiruvizha

‘வீரத்திருவிழா’ என்கிற படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்தையும் அதை உயிர்மூச்சாக சார்ந்து வாழும் மக்கள் இருக்கும் இடத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு இல்லை. வீரத்தின் வெளிப்பாடு தான் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்காக ஐந்து இளைஞர்கள் ஈடுபட்டு ஜல்லிக்கட்டில் வென்று ஊருக்கு எப்படி நல்ல பெயரை எடுத்து தருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

சத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். மற்றும் பொன்வண்ணன், சிந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் ஊரின் பஞ்சாயத்து தலைவராக பொன்வண்ணன் நடித்துள்ளார்.

விஜய்முரளிதரன் (எ ) வைரமணி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஜல்லிக்கட்டு தடை காரணமாக தாமதமாக வெளிவரும் இப்படமே தமிழில் ஜல்லிக்கட்டை வைத்து தயாரிக்கப்பட்ட முதல் படம் என்கிறார்கள் படக்குழுவினர்.

முழுக்க முழுக்க கிராமப்புற மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக வீரத்திருவிழா உருவாகி உள்ளது.. காரைக்குடி, அமராவதி புதூர், சிராவயல், ஆராவயல் ,நேமம், மற்றும் மேட்டூர் பெரியதண்டா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாம்

Comments are closed.