விரைவில் ‘இவன் வேற மாதிரி’ இசை வெளியீடு

181

யு.டிவியும் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரிப்பதாலோ அல்லது படத்தின் இயக்குனர் சரவணனுக்கும் அதில் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் இரண்டாவது படம் என்பதாலோ தெரியவில்லை, மொத்தத்தில் ‘இவன் வேற மாதிரி’ படம் ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றுள்ளது என்பது உண்மை.

கிட்டத்தட்ட படத்தின் 90 சதவீத வேலைகளை முடித்துவிட்ட இயக்குனர் சரவணன், ரிலீஸுக்கான வேலைகளில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆடியோ ரிலீஸ் பண்ணிய கையோடு சரியாக ஒரு மாதம் கழித்து நம்பர் மூன்றாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுரபி என்பவர் நடித்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்களுக்கு இசையமைத்த சி.சத்யா தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

1 Comment
  1. The Biltmore Mayfair says

    832465 438912Simply a smiling visitor here to share the really like (:, btw wonderful style and style . 832281

Leave A Reply

Your email address will not be published.