“சோகம் இல்லை.. சுப முடிவுதான்” – ரிலாக்ஸான ஜெயம் ரவி..!

95

ரொம்ப நாட்கள் கழித்து காதலர்களுக்கு இடையேயான ஒரு ஈகோ யுத்தத்தை முன்னிலைப்படுத்தி ஜாலியான ஒரு படமாக வரவிருக்கிறது ‘ரோமியோ ஜூலியட்’. ஜெயம் ரவி, ஹன்சிகா மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள இந்தப்படத்தை, தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக மாறியிருக்கும் லட்சுமண் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயம் ரவி, “காவிய காதலர்களான ரோமியோ, ஜூலியட்டின் சோகமான முடிவுபோல இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் இருக்காது. சுபமான முடிவுதான்.. ஹன்சிகா இதுவரை நடித்த படங்களை விட இதில் தான் உண்மையாக ‘நடித்திருக்கிறார்’ என்று சொல்லும் அளவுக்கு பின்னியிருக்கிறார். பூனம் பஜ்வாவுக்கும் சிறப்பான ரோல் தான்” என்று கூறினார்.

Comments are closed.