
பிசாசு மூலம் வேறொரு புதியதளத்தில் கதைசொல்ல முயற்சித்து அதற்காக பாராட்டுக்களையும் பெற்ற மிஷ்கின் தனது படங்களில் என்னவகையான ஹீரோ காம்பினேஷனை உருவாக்குவார் என கணிக்கவே முடியாது.. காரணம் ஸ்டார்களுக்காக படம் இயக்குபவரல்ல அவர். திடீரென புதுமுகத்தை நடிக்க வைப்பார்.. அல்லது அவரே கதைநாயகனாக மேக்கப் போட்டு விடுவார்.
இப்போது மிஷ்கின், தனது அடுத்த படத்தில் சரத்குமாரை கதாநாயகனாக வைத்து படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது என்ன மாதிரியான காம்பினேஷன்டா என யோசிக்கும் அளவுக்கு ரசிகர்களின் புருவங்களை முடிச்சிட வைத்துள்ளது. ஆனால் இந்தப்படத்தில் சரத்குமாரின் புதிய பரிணாமத்தையும் நடிப்பையும் இதில் பார்க்கலாம் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
Comments are closed.