காதலர் தினத்தில் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ்..!

237

ithu-namma-aalu
வழக்கமான வெள்ளிக்கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்களில் வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் மவுசை விட காதலர் தினத்தில் வெளியாகும் படத்திற்கு வரவேற்பு அதிகம். அதற்காக ஆக்சன் படத்தை அன்றைய தினம் வெளியிட்டால் அட போங்கய்யா என்று சொல்லிவிடுவார்கள் ரசிகர்கள்.. அன்றைய தினம் அவர்கள் எதிர்பார்ப்பது காதல் படங்களைத்தான்.

அதனால் தான் இவ்வளவு நாட்கள் பொறுத்து பொறுத்து பார்த்த சிம்பு, பாண்டிராஜ் இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தை காதலர் தினமான பிப்-14ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.. சிம்பு-நயன்தாரா என்கிற இருவர் மீண்டும் இணைந்திருப்பதால் காதலர் தினத்தன்று அதை பார்க்க ஒரு பெருங்கூட்டமே தியேட்டர்களுக்கு படையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.