புத்தாண்டு கொண்டாட இத்தாலி செல்லும் அமலாபால்

63

ஹன்சிகா லாஸ் ஏஞ்சல்ஸில் புத்தாண்டைக் கொண்டாடுகிறார் என்றால் அமலாபாலோ கிறிஸ்துமஸையும் புத்தாண்டையும் கொண்டாட இத்தாலிக்கு செல்கிறார். தற்போது கிறிஸ்துமஸ் வெளியீடாக கடந்த 20ஆம் தேதி வெளியான ‘ஒரு இந்தியன் பிரணய கதா’ அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

குறிப்பாக இந்தப்படத்தில் அமலாபால் ஏற்றிருந்த கேரக்டரும் அவரது நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது. இந்தப்படத்தில் முன்னணி இளம் நடிகர் ஃபஹத் ஃபாஸிலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அமலாபால். இதுவரை இரவல் குரலில் மட்டுமே பேசிவந்த அமலாபால், இந்தப்படத்தில் தனது சொந்தக்குரலில் டப்பிங்கும் பேசியிருக்கிறார்.

இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியில் இருக்கும் அமலாபால் இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது குடும்பத்துடன் இத்தாலிக்குச் சென்று கொண்டாட இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் புத்தாண்டு தினத்தில் ரோமிற்கு செல்லவும் திட்டமிட்டுள்ள அமலாபால் வாடிகன் சென்று போப் பிரான்சிஸின் ஆசிகளைப் பெறவும் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.