இந்தியில் முதன்முதலாக ‘சாஸ்மே பதூர்’ என்ற படத்தில் நடித்த டாப்ஸி அந்த படம் சரியாக போகாததால் கொஞ்ச நாள் வருத்தத்தில் இருந்தார். இருந்தாலும் இப்போது அடுத்ததாக பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் அமித்ராய் இயக்கும் ‘ரன்னிங் ஷாதி டாட் காம்’ என்ற புதிய படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப்பில் இருக்கிற பழமை வாய்ந்த கோட்டைகளில் நடைபெற்றது. இதில் கலந்துக்கிட்ட டாப்ஸிக்கு அந்த கோட்டைகளில் வசிக்கும் ராஜ வம்சத்தினரின் ராஜ உபச்சாரமும் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்த பின், அவர்கள் அளித்த விருந்தில் பாஞ்சாப்பின் சிறப்பு வாய்ந்த உணவு வகைகளை எல்லாம் ஒரு பிடிபிடித்திருக்கிறார் டாப்ஸி.
அதோடு தான் உட்பட படப்பிடிப்புக் குழுவினரை விழுந்து விழுந்து கவனித்த ராஜவம்சத்தினர் மிகவும் எளிமையாக பழகியதையும் பெருமையுடன் குறிப்பிடுகிறார் டாப்ஸி.