விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இரும்புத்திரை”. இதில் விஷால், சமந்தா, ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாலிவுட்டில் திரையிடுவது போல இந்தியாவிலேயே முதன் முறையாக விஷாலின் ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது.
இந்த திரையிடலில் இயக்குநர் மித்ரன் பேசியது, “எப்போதும் புதுமையை விரும்பும் விஷால் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்துவந்தார். அது இரும்புத்திரை படத்துக்கு நடந்துள்ளது இரும்புத்திரை ஆதாரினால் ஏற்ப்படும் ஆபத்தை பற்றி பேசும் படம் அல்ல.. டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும்” என்றார்..

Comments are closed.