தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர் கிருஷ்ண பாண்டி. இவர் தற்போது ‘எம்பிரான்’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா, பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் நடந்துமுடிந்து. ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Comments are closed.