ஏ.எல்.விஜய் டைரக்ஷனில் விஜய் நடித்த மாதிரி ஆர்.எஸ்.பிரசன்னா எனபவர் இயக்கியுள்ள ‘கல்யாண சமையல் சாதம்’ படத்துல ஹீரோவாக நடித்திருக்கிறார் நடிகர் பிரசன்னா. லேகா வாஷிங்டன் ஹீரோயினாக நடிக்கும் இந்தப்படத்தை எவரெஸ்ட் என்டெர்டெயின்மென்ட் சார்பில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் தயாரிக்கிறார்.
இந்தப்படம் தனக்கு பெரிய ஹிட் படமாக அமைந்து தனது சினிமா கேரியரை புரட்டிப்போடும் என்கிற பிரசன்னா, முதன்முறையாக இந்தப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்தப்படம் வரும் டிசம்பர்-6ஆம் தேதி ரிலீஸாகிறது.