“நான் இப்ப தனி ஆள் தான்”- ஹன்சிகாவுடன் காதலை முறித்தார் சிம்பு

107


யெஸ்.. இதுமாதிரி நடக்கும் என்று கடந்த இரண்டு மாதங்களாகவே சிலர் ஆருடம் சொல்லிக்கொண்டு தான் இருந்தார்கள். அதே மாதிரியே ஆகிவிட்டது. ஹன்சிகாவுடனான சிம்புவின் காதலில் சில நாட்களாகவே இருவருக்கும் நீரு பூத்த நெருப்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கருதப்பட்ட நிலையில் இப்போது சிம்புவே மீடியாவிடம் “நான் இப்போது தனி ஆள் தான்” என கூப்பிட்டு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

“போதும்.. இதுவரை இந்த உறவில் போதுமான தூரம் வரை போய்வந்துவிட்டேன். எப்போதும் என் நினைவுகளை அதிலேயே அதிகமாக செலவிட்டுவிட்டேன். இனி ஹன்சிகாவுடனான உறவைப்பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை. ஆம்.. ஹன்சிகாவை பிரிந்துவிட்டேன்.. நான் இப்போது தனி ஆள் தான்” என்று கூறியுள்ளார் சிம்பு.

“என் நண்பர்களுக்கு, என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு நான் விளக்கம் சொல்ல கடமைப்பட்டுள்ளதால் தான் இந்த விளக்கமும் கூட. நடந்த எதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் இதைப்பற்றி சொல்லவேண்டிய தருணம் இதுதான். இப்போது நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். இனி எனது படங்களில் கவனம் செலுத்தபோகிறேன்” என்றும் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்-14, காதலர் தினத்தன்று ஹன்சிகா ட்விட்டரில், “நான் தனியாகத்தான் இருக்கிறேன்” என ஒரு பரபரப்பான ஸ்டேட்டஸ் போடிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.