கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. படத்தின் பாடலை சூர்யா வெளியிட்டார். அரங்கம் முழுதும் நிறைந்திருந்த சூர்யா, கார்த்தி ரசிகர்கள் ஒவ்வொரு பாடல் காட்சியின் போதும் கொடுத்த ஆரவார கரகோசம் அழகுராஜா தீபாவளிக்கு ரசிகர்களுக்குக் கிடைத்த பத்தாயிரம் வாலா என்பதை நிரூபித்தது.
இந்த விழாவில் பேசிய கார்த்தி, “எஸ்.எம்.எஸ். படத்தை பார்த்து விட்டு ராஜேஷ் படத்தில் நடிக்க வேண்டும்னு நினைச்சேன். ஆனால் அதுக்கு வாய்ப்பு இல்லாமலே இருந்தது. அப்புறம் ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தை பார்த்து விட்டு சிரிக்காத எங்க அம்மாவே சிரிச்சுட்டாங்க. அப்பவே ராஜேஷை புக் பண்ணிட்டேன். இந்த படத்தை வெற்றி பெற வைக்கவேண்டியது உங்க கையில தான் இருக்கு.” என்று ரசிகர்களை பார்த்து சொல்ல, அதை ஆமோதிப்பது போல ரசிகர்கள் கூட்டத்திலிருந்து விசில் பறந்தது.
படத்தில் அந்தக் கால பிரபு போல கார்த்தி பாடும் பாடல் நிச்சயம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இருக்கும்.