கண்ணீர்விட்டு அழுதார் விஸ்வரூபம் வில்லன்

110

விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு அடுத்ததாக அனைவரையும் கவர்ந்தவர் வில்லன் ஒமராக நடித்திருந்த ராகுல் போஸ். தற்போது விஸ்வரூபம்-2விலும் நடித்து வருகிறார். இவர் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுதார்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற பெருமிதத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து இன்று விடைபெற்றார். மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் விடைபெற்று பேசியபோது அதை கேலரியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ராகுல்போஸின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அது இனிமேல் சச்சின் ஆட்டத்தை காணமுடியாது என்பதால் தான். “சச்சின் இங்கு ஆடுவதற்கு முன்னாடியும் கிரிக்கெட்டை பார்த்திருக்கிறேன். இனியும் பார்க்கப்போகிறேன். ஆனால் சச்சின் இல்லாத கிரிக்கெட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என சோகத்துடன் ட்வீட் செய்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.