நாகேஸ்வரராவ் மறைவுக்கு சூர்யா நேரில் அஞ்சலி..!

147

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும் நாகார்ஜூனாவின் தந்தையுமான நாகேஸ்வரராவ் நேற்று காலமானார். தெலுங்கு, தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் நாகேஸ்வராராவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தற்போது மும்பையில் ‘அஞ்சான்’ படப்பிடிப்பில் இருக்கும் சூர்யாவும் இன்று ஆந்திரா வந்து நாகேஸ்வரராவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினரிடம் தனது இரங்கலையும் தெரிவித்தார்.

லிங்குசாமியின் டைரக்‌ஷனில் சூர்யா நடித்து வரும் ‘அஞ்சான்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட படப்பிடிப்பையும் மும்பையில் நடத்திய லிங்குசாமி இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு முதலில் கோவா செல்லத்தான் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் மும்பை வட்டாரத்திலேயே படப்பிடிப்புக்கு ஏற்ற லொக்கேஷன் கிடைத்துவிடவே இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் அங்கேயே நடத்த ஆரம்பித்துவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.