‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருள்நிதி, பிந்துமாதவி, அஸ்ரிதா ஷெட்டியை வைத்து தற்போது சிம்புதேவன் இயக்கிவரும் படம் ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அடுத்ததாக. சிம்புதேவன், விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தனது நெருங்கிய நண்பரும் பத்திரிகை மக்கள் தொடர்பாளருமான பி.டி.செல்வகுமாருக்கு ஒரு படம் நடித்து தர வாக்களித்து உள்ளார்.
அந்தப்படத்தைத்தான் சிம்புதேவன் இயக்க இருப்பதாகவும் படத்திற்கான ஒன் லைனை விஜய்யிடம் சொல்லி விட்டதாகவும் அந்த தகவல் கூறுகிறது. ஆனால் நம்பத்தகுந்த வட்டாரங்களில் வந்த தகவலின்படி இன்னும் எந்த ஒரு விஷயமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வமான தகவல் வந்தால் மட்டுமே இது உண்மையாகும் என்றும் கூறப்படுகிறது.