மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் அனில்குமார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இந்த வருடம் மேமாதம் மலையாளத்தில் வெளியான ‘க்ளைமாக்ஸ்’ படத்தின் இயக்குனர் இவர்தான். இந்தப்படம் தமிழில் ‘ஒரு நடிகையின் டைரி’ என்ற பெயரில் ரிலீஸானது. 1989லிருந்து தனது பயணத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவரும் அனில்குமார் இப்போது முதன்முதலாக தமிழிலும் காலடி எடுத்துவைக்கிறார்.
‘ஒன்பதுல குரு’ படத்தை தொடர்ந்து வேறு எந்தப்படத்திலும் கமிட்டாகாமல் இருந்த வினய் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியக மதுரிமா நடிக்கிறார். இதுவரை தெலுங்கு, இந்தியில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த மதுரிமா இந்தப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். முழுப்படத்தையும் நியூசிலாந்திலேயே எடுக்க திட்டமிட்டுள்ளார் அனில்குமார். 2014 ஜனவரியில் படப்பிடிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்கள்.