நேரில் ஆளைப் பார்க்காமல் இணையதளத்தின் மூலமாகவே ஏமாற்றும் சில மோசடிக்கும்பல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் இசைத்துறையைக்கூட விட்டு வைக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். அப்படி ஒரு கும்பலிடம் சமீபத்தில் ஏமாற இருந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி, நல்லவேளையாக அந்த மோசடிப்பேர்வழியின் சுயரூபத்தைக் கண்டுபிடித்து அவனை எச்சரித்து விட்டிருக்கிறார் கார்க்கி.
விஷயம் இதுதான். மதன் கார்க்கியுடன் ஈமெயில் மூலமாக தொடர்புகொண்ட மோசடி நபர் ஒருவன், அமெரிக்க நடிகரும் பாடகருமான ஜஸ்டின் டிம்பர்லேக்குடன் சேர்ந்து ஒரு ஆல்பம் பண்ணப்போவதாகவும் அதற்கு தெனிந்திய சாயலில் சில பாடல்கள் தேவை என்பதால் நாம் இருவரும் இனைந்து பணியாற்றலாம் என ஈமெயிலில் தூது விட்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் அதை உண்மை என்று நம்பிய கார்க்கியும் சில பாடல்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால் சீக்கிரமே அவன் ஒரு மோசடிக்கும்பலை சேர்ந்தவன் என கண்டுபிடித்த மதன் கார்க்கி அவனைப்பற்றி சைபர் க்ரைமில் புகார் கொடுக்கப்போவதாக எச்சரித்து இருக்கிறார். அந்த மோசடி நபர் ஈமெயில் மூலமாக மேலும் கௌதம் மேனன், சின்மயி ஆகியோருடனும் இதேபோல தொடர்புகொண்டு பேசியிருக்கிறானாம்.