நாவலாக எழுதப்பட்டு அதன்பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டு உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம்தான் ஹாரிபாட்டர். ஹாரிபாட்டர் படத்தின் ஒவ்வொரு பாகமும் ரிலீஸாகும் நாள் ரசிகர்களுக்கு உற்சாக திருவிழா மாதிரி தான்.
இப்போது ஹாரிபாட்டரின் வெற்றியைக் கொண்டாடுகிற வகையில் ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனமும், ‘யுனிவர்சல் ஒர்லாண்டோ ரிசார்ட்டும்’ சேர்ந்து அடுத்த வருஷம் மிகப்பெரிய விழா ஒன்றை கொண்டாட ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
ஹாரிபாட்டரின் ரசிகர்களுக்காக நடத்த இருக்கும் இந்தத் திருவிழா 2014ம் வருடம் ஜனவரி மாதம் 24,25,26 ஆகிய மூன்று நாட்கள் ஒர்லாண்டோவில் நடைபெறவிருக்கிறது. ‘ஹாரிபாட்டர்’ சாகஸங்கள் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு அந்தப்படத்தை உருவாக்கியவர்கள் பதில் சொல்லும் வகையில் வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றையும் இந்த விழாவுக்காக ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.