ஆந்திர சினிமாவைப்பொறுத்தவரை விக்டரி என்றால் வெற்றி என்று அர்த்தமல்ல, வெங்கடேஷ் என்றுதான் அர்த்தம். அந்த அளவுக்கு கடந்த 27 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநயகனாக வலம் வருபவர் வெங்கடேஷ். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்து ஏரியவிலும் வெங்கடேஷின் கை ஓங்கியே இருக்கும்.
தமிழின் பல சூப்பர்ஹிட் படங்கள் இவர் நடிக்க தெலுங்கில் ரீமேக் ஆகியிருக்கின்றன. எங்க சின்ன ராசா, சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர், சூர்ய வம்சம், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், காவலன் என பல ஹிட் படங்களை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது வெங்கடேஷ்தான். திரையுலகில் இவரின் முதல் ஜோடி குஷ்பூ என்பதும் குஷ்பூவின் முதல் ஹீரோ வெங்கடேஷ் என்பதும் ஆச்சர்யமான ஒற்றுமை.
இன்று பிறந்தநாள் காணும் வெங்கடேஷுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.