ஹேப்பி பர்த்டே வெங்கட் பிரபு..!

225

venkat-prabhu
இசைக்குடும்பத்தில் வாரிசாக வந்தவர் இசையமைப்பாளராக ஆவார் என பார்த்தால் இயக்குனராக மாறி, அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தார் வெங்கட்பிரபு.. அதுமட்டுமல்ல, புதிய பாணியிலான படங்களை இயக்கி, தொடர்ந்து ரசிகர்களை தக்கவைக்கும் ஹிட் படங்களாக கொடுத்து முன்னணி இயக்குனராகவும் உயர்ந்தார்.

வெங்கட் பிரபு தனது படங்களுக்கான கதைக்களத்திற்காக மட்டுமல்ல.. அதில் நடிக்கும் முக்கியமான கேரக்டர்களை தேர்வு செய்வதிலும் அசகாய சூரர். அந்த வகையில் ஹீரோக்களை தவிர படத்தில் நடிக்கும் வில்லன் கதாபாத்திரத்திற்கோ அல்லது வில்லன் மாதிரி தோன்றி குணச்சித்திரமாக மாறும் கதாபாத்திரத்திற்கோ இவர் ஆட்களை தேர்வு செய்யும் பாணியே தனி.

அடுத்து ஒரு மெகா ஹிட் கொடுக்கவேண்டும் என தீவிர முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கும் வெங்கட் பிரபுவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.