சிம்புவை வைத்து ‘மாநாடு’ நடத்த தயாராகும் வெங்கட்பிரபு..!

241

maanadu team

தனது பழைய பாணிகளைத் தூக்கியெறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என ஒரு புது சிம்பு தெம்பாக களமிறங்கியுள்ளார். அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் என பரபரப்பாக தனது கேரியரை சுழலவிட்டிருக்கும் சிம்புவின் அதிரி புதிரியான கூட்டணி வெங்கட் பிரபு இயக்கம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என்ற செய்திதான் கோடம்பாக்கத்தை இன்று பரபரப்பாக்கி வைத்திருக்கிறது.

படத்திற்கு “மாநாடு” என பெயர் சூட்டியிருக்கின்றனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் முழுக்க முழுக்க முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும் களத்திலும் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு விரைவில் தொடங்க இருக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது

Comments are closed.