‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் ரெஜினா. இவர் ஏற்கனவே ‘கண்ட நாள் முதல்’, ‘அழகிய அசுரா’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ தான் இவரை பளிச் என அடையாளப்படுத்தியது.
தற்போது பிரகாஷ்ராஜ் மும்மொழியில் தயாரித்து இயக்கிவரும் ‘உன் சமையலறையில்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்பில் நடித்துவருக்கிறார் ரெஜினா. இது தவிர இன்னும் கைவசம் நான்கு தெலுங்குப்படங்களையும் வைத்திருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் ரெஜினாவுக்கு behind frames’ தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.