இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தயாரிப்பில், பாலுமகேந்திராவின் சீடரான விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ள ‘மதயானை கூட்டம்’ படத்திற்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. புதுமுகம் கதிர் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஓவியா.
தேனி மாவட்டத்தில் நடக்கும் கதைக்களத்தில் கேரளாவில் இருந்து தேனிக்கு வந்து நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவியாக நடித்திருக்கிறார் ஓவியா. இந்தப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்கிறார். ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ்குமார் இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார். கிறிஸ்துமஸ் ரிலீஸாக ‘மதயானை கூட்டம்’ புறப்பட்டு வர இருக்கிறது.